என்னில் நீங்கா நினைவே...!
விரல்களே இல்லாமல்
என் மேனி தீண்டினாய்...
இதழ்கள் இல்லாமல்
என் பாதங்களை முத்தமிட்டாய்...
கைகள் இல்லாமல்
என்னை ஆரத்தழுவினாய்...
பார்வை இல்லாமல்
என்னுள் பல்லாங்குழி
விளையாடுகிறாய்...
உறவே இல்லாமல்
உரசிப் பார்க்கிறாய்...
எனக்கும் அவனுக்கும்
இடையில் துள்ளிக் குதிக்கிறாய்...
உன் அழகில் நான்
என்னைத் தொலைத்தேன்...
நான் உன்னில்
கரைந்தே போனேன்...
கவித்துவமாக
என்னவன் சம்மதமின்றி...
உன்னைக் காணவந்த
என்னைக் களவாடி விட்டாயே
அழகிய கடல் அலையே...
வயிறே இல்லாமல்
சுனாமி என்ற பெயரில்
மக்களை முழுவதுமாக
புசிக்கிறாய்...
என்பதையே
மறுக்கிறது மனம்...
ஆனாலும்...
என்னில் நீங்கா
நினைவே...!
நீ கடல் அலையே...!!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.