நட நட நடை
நட நட நட
திரும்பாதே நீ
முகத்தைத் திருப்பிப் பார்த்தால்
வந்திடுமோ போன நொடி
நட நட வெய்யில் காலம் இது
பனைமர நிழலும் நிலையா நிற்குமா?
சூடு கொள்ளாது எரிந்து சாம்பலாகாலம்
நட நட நட..
உச்சந்தலை ஏறிய வெய்யில்
நட நட நீ திரும்பாதே
பாதம் நோகக் காய்த்துப் பழுக்கும் பழம் கொப்புளம்
நிற்காதே நட நட
நீ நிற்க நின் நிழலும் சூடு கொள்ளாது
மாண்டு போனாலும போகலாம்
நட நட நட
திரும்பாதே நீ’
அதே சொல் நடை வேகத்தோடு
உச்சந்தலை வெய்யில் ஏற
தலையிலிருந்து வடிந்து கொண்டிருந்தது
வேப்ப எண்ணெய்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.