புதிய பாதை
மண்ணிலே பிறக்கையிலே
மன்னர் யாரடா
முயன்றால் ஒருநாள்
மண்ணிலே பிறந்தவரெல்லாம்
மன்னராய் மாறலாமாடா
வண்ணத்திலே பிரிவினை
காணுதல் பாவமடா
எண்ணத்திலே ஒற்றுமை
காக்க வேணும்டா
பண்பாடு இல்லாமல்
பயன்பாடு இல்லை
அன்போடு நடவாமல்
நல்வாழ்க்கை இல்லை
தடம்மாறி தடுமாறி
வாழ்வதென்ன வாழ்கை
தடம்போட்டு திடமாக
வாழ்வதே வாழ்கை
விழுகாமல் எழுகாமல்
வென்றவர் யாருமே இங்கில்லை
விழுந்து எழுவாமல்
தோற்றவர் தான் உண்டிங்கே
நாம் எல்லாத்தையும்
வேடிக்கை பார்ப்பதாலே
நாம் இழப்பது
வாடிக்கை ஆச்சு
புற பொல்லாங்கு
பேசாமல் வாழ்ந்தாலே
பொழப்பு தன்னாலே
வளமாக மாறிடுமே
இல்லாதாருக்குக் கொடுத்து
நீ வாழ்தலே
இல்லாமை இல்லாமல்
இங்கு போகிடுமே
கடந்த பாதை
கடந்து போகட்டும்
புதிய பாதை
பொதுடைமை ஆகட்டும்
- ஜீவா நாராயணன், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.