போராட்டம்
மொட்டுக்குள் மணமிருக்க
மணம் வீசப் போராட்டம்
இதழ்களை விரிக்க...!
புள்ளினங்கள் பலவிருக்க
சிறகுகளுக்குள் போராட்டம்
பறப்பதற்கு...!
வாழ்க்கையில் வசந்தமிருக்க
இன்முகம் காட்டப் போராட்டம்
இதழ்களுக்குள்...!
பரந்துப் பட்ட நிலமிருக்க
மனிதர்களுக்குள் போராட்டம்
விதைகளைத் தூவுவதற்கு...!
விண்ணில் விண்மீன்கள் பலவிருக்க
பிரதிபலிப்பைக் காட்டப் போராட்டம்
தனனை அடையாளம் காட்ட...!
இளைஞனே உன்னுள் திறமையிருக்க
இலட்சியத்தை வெல்லப் போராட்டம்
சாதனை படைக்க உதவுமோ...!
- முனைவா் சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.