இதுவோ காதல்
உள்ளத்தோடு
இணையும் பொழுது
இருவரும் தன்னை மறந்து
அன்பினை அர்பணிக்கும்
தருணம் வெளிப்படுவது
அன்புக் காதல்.
தன்னுயிர் மதிப்பை அறியாதவன்
பிறிதொருயிர் நெஞ்சத்தின்
மனதைப் பகிர்கின்ற
நாழிகையில் உணர்கிறான்
பரவசக் காதலை.
உள்ளத்தின் உணர்வுகளை அறிந்து
உயர்வான எண்ணத்தைக் கண்டு
தன்னுயிரை தரும் நேரத்தில்
வெளிப்படுவது உண்மைக்காதல்.
விழிகளின் மோதல்களினால்
இதயத்தின் துடிப்புகளை
நிறுத்தும் பார்வைகள்.
நொடிப் பொழுதில்
உணர்ந்தேன்
காதலின் நிலையை.
அகத்திற்குள் எழும் மாற்றங்களை
புறத்தோடு புகட்டுவதற்கு
விழிகள் உணரத்தும்
ஆத்ம காதலை.
உயிரைத் தரும் காதல்
வாழ்வில் வசந்ததைத் தவிர
எதையும் அறியாது
இயற்கையோடு இணைந்தவுடன்.
உறவின் பந்தத்தை
பகிர்ந்து கொள்ளும் கனம்
பிறப்பின் தன்மை அறியும்,
காதலில் உறவுகள் நிலைத்திருக்கும்.
- முனைவா் சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.