ஹைக்கூ குருவிகள்
வீட்டைக் காலிசெய்தும்
வந்து வந்து போகிறது
இரை தேடும் சிட்டுக் குருவி
* * * * *
யாருமற்ற வீடு
எட்டி எட்டிப் பார்க்கும்
ஏமாற்றத்தில் குருவி
* * * * *
பழைய வீட்டுக்காரர்போல்
புதிய வீட்டுக்காரர் இல்லை
துரத்தப்படும் குருவிகள்
* * * * *
மூதாதையர்க்குப் பதிலாய்
முழுமனதோடு வந்துபோகும்
இரைகொத்துங் குருவிகள்
* * * * *
பார்த்ததும் கண்கள்
பரபரத்துப் பளபளக்கின்றன
நடைவாசலில் குருவிகள்
* * * * *
முகம்பார்த்துத் தன்னைக்
கொத்திப் பார்க்கும் குருவி
இருசக்கர வாகனக் கண்ணாடி.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.