உறவுகள்
அப்பா
அப்பாவியான
ஏமாளியான
பணங் காய்க்கும் மரம்.
*****
அம்மா
ஏமாளியான
பணம் பறித்துக் கொடுக்கும்
கோமாளி.
*****
அண்ணன்
முதல்வனென்று
குடும்பத்துள் திரியும்
தவளை.
*****
தம்பி
முகம் மாறியது
முகவரிக்கே!
வரிப் போடும் வசூல்.
*****
தங்கை
தன் கையைப் பாராமல்
அக்காவின் கையைப் பார்க்கும்
ஜோதிடர்.
*****
அக்கா
ஜோதிடரையே சோதிக்கும்
சோக நெறி கொண்ட
வழி தெரியாமல் விழி.
*****
மாமன்
முகத் துதியிலாரம் பித்து
மகளின் நாக்கான
ருசி நாகம்.
*****
அத்தை
கலாச்சார விளக்காய்
மகளை இருட்டாக்கும்
மந்திரவாதி.
*****
குடும்பம்
முதியோர்களை முடக்கி
இளையோர்களை இணையத்தில்
முடக்க விடும் கூடாரம்.
*****
காதல்
பணத்துக்காக மனமும்
மனத்திற்காக பணமும்
பரிமாறும் மழைக்காலம் புற்கள்.
- முகில் வீர உமேஷ், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.