அடுத்த விடியல் நோக்கி!
உறக்க மற்றவிழிகள்
விண்ணிலே உலாவிக்
கொண்டிருந்தன....
இரக்கமற்ற நிலவோ
நில்லாமல் ஓடி ஒடி
விளையாடுது...
நட்சத்திரங்களோ
நடுநிசையில் நர்த்தனம்
ஆடுகின்றன...
விடியும் வரை நிலவும்
தரையிறங்கவில்லை.
நித்திரையும் விழி தழுவவில்லை...
ஆதவன் வந்தணைத்துக்
கொண்டான் அனைத்தையும்
நேசிப்பதாய்த் தன்
பொன்நிற கதிர்கொண்டே...
கம்பனைப் போல
நானும் ஏமாந்தேன்
இயற்கை இனிதாக
நிலையாக எதையும்
நிறுத்தவில்லை...
நான் மட்டும் சின்ன
சின்ன சங்கடங்களில்
சங்கமமாகித் துவளலாமா
என்றே வீறுகொண்டே
எழுந்தேன் அடுத்த
விடியல் நோக்கி...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.