யாதொரு காரணமின்றி...
தெருவழியாய் நடந்து சென்ற
ஒருவனை
யாதொரு காரணமின்றியும் கடித்தது.
மீண்டும் அதே தெருவழியாய்
வேறொரு நாளில்
வேறொருவன் நடந்து செல்ல
அவனையும்
யாதொரு காரணமின்றியும் கடித்தது.
யாதொரு காரணத்திற்காகவோ
யாதொரு வழியும் இல்லாத காரணத்திற்காக
யாதொரு கேள்வியும் இன்றி நடந்து சென்ற
யாதொரு பாதகமும் செய்யா என்னையும்,
யாதொரு கோபமும் தீராத
அதே விலங்கு
யாதொரு காரணமுமின்றி
அவ்வழி நடந்து சென்ற
மற்றவர்களையும் கடித்தது.
யாதொரு காரணத்திற்காகவோ
அத்தெருவழியாய் நடமாட
யாவருக்கும்
இப்போது வரைக்கும் துணிவில்லை.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.