காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
அன்பும் அகிம்சையும் ஆன்றோர் அரவணைப்பும்
இன்புறுகு சிந்தை எடுத்தாளும் - மன்பதையில்
சாந்தி நிலவும் சமத்துவம் ஓங்குதற்கே
காந்தியுகம் தோன்றும் கனிந்து.
*****
எல்லோரும் எல்லாமும் இங்கே பெறுதற்கே
நல்லோர் வழியே நலமாகும் - சொல்லுதற்கு
மாந்தர் நடுவே மகத்துவம் தந்தவண்ணல்
காந்தியுகம் தோன்றும் கனிந்து.
*****
மேலைநா டெங்கும் வியந்தவொரு தத்துவம்
காலைக் கதிரெனவே காரிருளை - மூலைதுரத்தி
சாந்தி நிலவிடத் தந்தசுடர் நம்நாட்டில்
காந்தியுகம் தோன்றும் கனிந்து.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.