கடற்கரைத் தூய்மை காப்போம்
கேள்மையோரே !கேளீர்! ஒரு செய்தி!
ஒவ்வோர்ஆண்டும் செப்டம்பர் மாதம்
மூன்றாம் சனிக்கிழமை உலகெங்கும்
கடற்கரைத் தூய்மைநாள் கடைபிடிக்கப்படுகிறது!
நாமும் பங்கேற்று நன்மை புரிந்திடலாம்!
ஆழிசூழ் உலகமிது ! திரைகடல் சூழ்ந்த நிலம்
உளவியல் நன்மை, சூழலியல் மேன்மை,
பொருளாதார வளமை போக்குவரத்து வழி
சுவையூட்டும் உப்பு, சத்து நிறைந்த உணவு
மழைவள மேகத் தோற்றிடத் தாய்மையென
பன்முகப் பெருமை சான்றது கடலன்னை!
பல்லுயிர் பாங்காக வாழ்ந்திடும் பரப்பு!
கழிவுகளைக் கொட்டியும் நெகிழிகளை எறிந்தும்
வீணாக்கிவிட்ட கடல் தூய்மை மீட்டிட
தூய்மைப் பணியாம் தகுபணியாற்றிட
அனைவரும் வாரீர் ! சூழல் காப்போம்!
சூளுரை கூறித் தூய்மை போற்றுவோம்!
- ப. குழந்தைசாமித்தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.