நல்லுலகம் சமைக்க
தூசிகள் படிந்த
நட்சத்திரங்களை
இதயத்தில் வைத்துத்
திரிந்து
வெற்று சீமைக் கருவேலமாய்
இருப்பதை விட;
தூசிகளி்ல்லா
இந்தியாவைத்
தூண்டும் வேலையும்;
துண்டாடும்
இந்தியாவை
ஒன்றாக்கும் வேலையும்;
பொய்யோடு திரியும்
அரசியல் வியாதிக்கு
மருந்து போடும் வேலையும்;
பாரம்பரியமென்று
வெட்டிப் பேச்சு
விடுத்து
செயலாக்க வேலையும்;
ஒழுக்கக் கேடுகளை
களைந்து
ஒழுக்க நெறி வேலையும்;
எங்கள் மத ஆண்டவன்தான்
உண்மையென்னும் மூடரை
உதைத்து
எல்லாமொன்றெனக் காட்டி;
நல்லுலகஞ் சமைக்க
நடுங்காமல் நிமிரும்
இளைஞர்களே!
என்றும்
மக்கள் தம்
இதயத்தில் இடம்
பிடிக்கும்
நாயகர்கள்...
- முகில் வீர உமேஷ். திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.