தமிழ் கண்ட கலைஞர்
கணையாழி பெற்றத்
திராவிட சீதை
அண்ணாவின் ஆசைத்தம்பி
பேச்சிலே! அங்கதச் சொல்லை
மூச்சாய்க் கொண்ட
ஆரூரின் தேர்
தென்னிந்தியா கண்ட
சமத்துவப் பெரியார்
பழந்தமிழுலகின்
பகற் சாட்சியாய்,
கோட்டங்களும், கோட்டைகளும்
கொண்டு சமைத்திட்ட
பைந்தமிழ் நளன்
மனுநீதிச்சோழனின்
மனு கண்ட பூமி
மரமிலை பூக்களை
வாழவிட்ட−ஆகாயச்
சக்தி சூரியன், −சில
சகதிகளால் சிறு
சந்தமிழந்தாலும்,
பாரசக்தி தந்த கலைஞர்;
பாறைத் துளைத்த வித்துபோல்
மீண்டும், மீண்டு− இனத்
திராவிடத்திற் பூத்த
குளிர் சூரியனாக
குவலயஞ் சிறக்க வா! வா!!
- முகில் வீர உமேஷ். திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.