தீபத் தீ வளர்த்திடுவோம்
இருண்ட காடு போல்
உருட்டும் கூட்டங்களுள்
மிரளாமல் வாழ
மிரட்டும் மொழிகளைத்
தரட்டும் பார்க்கலாம்
எனும் துணிவோடு
வளர்ப்போம்
நம்பிக்கையை − கணபதியின்
தும்பிக்கையாக;
பாரதியின்
அக்னிக் குஞ்சாக;
அரண்ட மனதுக்கு
ஔடத வழியா யேற்றி;
விழியைத் திறந்து
வழிகாட்டு மொளியாய்;
துன்பம் மாற
வார்த்தைக்குள்ளும்
நக்கீரனாய்;
மானுடஞ் சொல்லும்
உயர் வேதமாய்;
யாகமாய் வளர்ந்து
யோகந் தரும்
தீபத் தீ வளர்ப்போம்
ஒவ்வொரு உள்ளத்திலும்
ஓயாத ஆத்மாவிலும்...
- முகில் வீர உமேஷ். திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.