குறுங்கவிதைகள்
ஆசான்
அஞ்ஞானம் அகற்ற
மெஞ்ஞானம் கலந்த
விஞ்ஞானி.
* * * * *
கவிதை
கற்பனைக் காதலில்
கண்ட
காட்சியின் வெளிப்பாடு.
* * * * *
கனவு
செல்லுலாயிட்
இல்லாமல்
ஓடும் - விழித்திரை
வண்ணப்படம்.
* * * * *
பெண்
அலங்காரச்
சுமையால்
அலைந்து
கொல்(ள்)பவள்.
* * * * *
ஆண்
ஆசை பளுவினால்
அண்ணாந்து
கிடப்பவன்.
* * * * *
தத்துவம்
ஒவ்வொருவரும்
தனிமையில் இசைக்கும்
இதய ராகம்.
* * * * *
அழகன்
கண்ணாடிக்குள்
தன்னைப் படிப்பவன்.
* * * * *
காதல்
விழிகளின்
விளையாட்டால்
பாதகமாகி
இதயத்தை இடிப்பது.
* * * * *
விதவை
பகலில்
ஆவியாய்
உலவும்
தேவதை.
* * * * *
தந்தை
தன் கை
தனக்கு வழிகாட்டி
என்பதன்
உள் அர்த்தம்.
* * * * *
வெம்பா
அவள்
பனி என ஏமாந்ததின்
பிரதிபலிப்பு.
- முகில் வீர உமேஷ். திருச்சுழி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.