விவசாயி
காட்டைக் கழனியாக்கி
மேட்டை மடுவாக்கி
வேட்டை நாயைத் துணையாக்கி
கோட்டைக்கே உணவளித்த விவசாயி…
இன்று சேட்டைகள் பலவும்
செய்து பார்த்தாலும் பயனில்லை
ஆட்டையும் மாட்டையும் கூட
பாதுகாக்க அவனுக்கு துப்பில்லை…
மருந்து மாத்திரைகள் எதுவும்
மனதில் பதியாவிட்டாலும் கூட
பருந்தும் கழுகும் பார்க்காவண்ணம்
பாதுகாத்தும் பயனில்லை கோழிகளை…
இயற்கை சமநிலையை அழித்து
செயற்கை மருந்துகள் தெளித்து
வயலையும் வாசலையும் கெடுத்து
வாழ்ந்து கெட்டவன் விவசாயி…
- கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.