சுமைகள்...
சுமைகள் நிறைந்த
வாழ்க்கை இது...
சுமையாய் இருந்து
பிறந்த
மனிதனின் தலையில்
பல சுமைகள்...
பெற்றவளுக்குச்
சுகமான சுமையாயிருந்து
பிறந்த
பிள்ளைகள் வளர்ந்ததும்
வந்துவிடுகின்றன பல சுமைகள்...
பள்ளியில் புத்தகச் சுமை,
பருவ வயதில்
காதல் சுமை,
காதல் தோல்வியில்
இதயச் சுமை,
கல்யாண வாழ்வில்
ஏமாற்றச் சுமை,
குடும்ப வாழ்வில்
கடன் சுமை தொடங்கி
பல சுமைகள்...
கடந்தபின் இவற்றையெல்லாம்,
வருவதுதான்
முதுமைச் சுமை,
இதில்
பிள்ளைகள் கைவிட்டால்
அது
மிகப் பெரும்சுமை...
கட்டையில் போகும்
சுமைக்குமுன்,
குறைவதில்லை
மனிதனின் சுமைகள்...
கடவுள்களே வாருங்கள்,
வந்து
குறையுங்கள் இந்த சுமைகளை...!
- செண்பக ஜெகதீசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.