திண்ணியர் ஆவீரே!
மாண்புகள் மிக்குயர் மானுடரே கேளீர்!
மானுடம் வளமுற, சாதனை புரிந்திட
புதியன படைத்திட, போலிமை பொசுங்கிட
வளர்ச்சி பெருகிட, வெற்றி குவிந்திட
எண்ணிய எல்லாம் எளிதில் அடைந்திட
திண்ணியர் ஆவீர்; திறன் வளர்ப்பீரே!
மதிநுட்பத்தோடு மடியிலாது உழைப்பின்
வெற்றிகள் குவியும்; வேண்டியன கிட்டும்!
அறிவுடைமை ஆற்றல் அனுபவம் உழைப்போடு
ஊக்கமும் இணைந்திடில் உயர்மை உறுதி!
வன்திறனோடு வாழ்வியல் மென்திறன்களும்
வாய்த்திடத் திண்மைமிகு தீரர் ஆகலாம்!
வள்ளுவம் வகுத்த இந்நன்னெறி வாய்ப்பீர்!
திறன் வளர்த்துத் திண்ணியர் ஆவீரே!
- ப. குழந்தைசாமித்தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.