முகமூடி மனிதனே...
உறவாடி கெடுக்கும் உள்ளமே
பறக்கும் சிறகென முகமூடியாய்
அணிந்த சகமனிதன் உலவும்
வணிக உலகமிது தம்பி
உள்ளொன்று வைத்து புறமொன்றாய்
கள்ளமுடன் சிரிக்கும் மனிதனின்
முகமூடி திரைதனைக் கிழிக்கும்
மகத்துவம் கற்பாய் தம்பி
கூடயிருந்தே குழிபறித்து நயமாய்
நாடகமாடும் முகமூடி மனிதனே
ஊரெங்கும் சீர்கேடு வரவழைக்கும்
பாரென்று கிளர்ந்தெழு தம்பி
பள்ளம் மேடான வாழ்க்கையில்
துள்ளும் முகமூடி மனிதனே
திருந்திட வாய்ப்பு கொடுக்கும்
கரும்பென இனித்திடு தம்பி
திருந்தும் வழியை உதறி
கருத்தில் மாறுபடும் மனிதனின்
முகமூடி கிழிக்கும் ஆற்றலின்
அகராதி வடிவாகு தம்பி!
- கவிமலர், மதுரை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.