கையூட்டுகளாகும் காத்திருப்புகள்
ஒவ்வொரு பொழுதும்
கையூட்டாகவே
மாறுகின்றது
காத்திருப்புகளில்...
*****
நிராசையெல்லாம்
தீர்ந்தேவிடுகின்றன
ஆசையிடத்தில்....
*****
தவம் செய்கிறது
நெடுஞ்சாலைகளில்
வழிகாட்டி....
*****
நமது தோட்டத்திலே
விளைந்த விளைச்சலை
மாற்றான் தோட்டத்தில்
அறுவடைசெய்கிறான்
இந்திய இளைஞன்...
*****
புத்தகங்களின்
அணிவகுப்பாய்
வாழ்கின்றன
சரித்திர யுத்தங்கள்...
*****
வெள்ளை சேலை
உடுத்திய விதவையாய்
வானம்..!!
அவளது நெற்றியில்
மஞ்சள் பொட்டாய் உதித்தது
மாலைநேரச் சூரியன்...!!
*****
எதுவும் இல்லை
என்பதில் இருக்கிறது
எல்லாம்...
- வே. சுமதி, பொள்ளாச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.