புத்தாண்டில் ஓங்கும் புகழ்
ஒளியுண்டாம் வாழ்வில் உயர்வுண்டாம் நெஞ்சக்
களிப்புண்டாம் சொல்லுங் கவிதை - வெளியுண்டாம்
வித்துண்டாம் நம்பிக்கை வீச்சுண்டாம் உண்டிங்கே
புத்தாண்டில் ஓங்கும் புகழ்...
கால வெளியிற் கடந்தவை எண்ணியே
ஓலமிட வேண்டாம் ஒருநாளும் - ஞாலமதில்
நத்தி வரத்தக்க நல்லுயர்வு வந்தடையும்
புத்தாண்டில் ஓங்கும் புகழ்...
சென்றதினி மீளாது செல்லரிக்கும் உள்ளத்தைக்
கொன்றழிக்கும் துன்பங்கள் கூடினாலும் - நின்றுவெல்ல
உத்தமர் கைகோர்க்க ஊராரும் கூடிவர
புத்தாண்டில் ஓங்கும் புகழ்...
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.