மின் விளக்கு

நெருப்பின் வாசம் தரும்
தீபங்கள் சூரியக் குழந்தைகள்
பனிமலரின் குளுமை தரும்
மின்விளக்கு சந்திரக் குழந்தை
வண்ண வண்ணப் பூக்களாய்
வாசல்தோறும் சிந்திச் சிதறும்
ஆல்வா எடிசனின் அற்புத
ஆதிசயக் கண்டுபிடிப்பின் உச்சம்
நீ உன்னதம் பெருக்கும்
ஓவியக் கலைஞனின் ஓவியம்
நீ காலங்காலமாய்க் காதலைச்
சேர்க்கும் சக்தத்தூதுவன்
நீ படிப்பவர்களின் தோழன்
பாதுகாப்புத் தொழிலில் நண்பன்
நீ புன்னகைத்தால் வாழ்க்கைப்
புத்துணிர் பெற்று ஜனிக்கிறது
நீ வெளிவிடும் வெளிச்சத்தில்தான்
வம்சம் தழைத்து ஓங்குகிறது
நீ சிரித்து மலர்ந்தால்
நெஞ்சில் மத்தாப்பு பூக்கிறது
உன்முகம் வெட்கத்தால்
காதலியாய் நாணம் கொள்கிறது
உன் மேனியில் மின்னல்
வெட்ட முகம் மூடுகிறது
உன் முகம் கண்டே
பிறப்புரிள் துவங்குகிறது
உன் மினுமினுப்பில்தான்
மின்மினிகள் உயிர் பெறுகிறது
காதலுக்குக் கை கொடுத்ததும் - என்
காதலியைப் பார்த்துக் கண்ணடித்ததும்
நீதான் நீயேதான் என்
தீபிகாவைக் கண்டும் கண்ணடிக்கிறாய்
என் அன்றாடங்களில் அசைக்க
முடியா உறுப்பினர் ஆனாய்
உன் கைகோர்த்து தொடர்வதே
வாழ்வின் உயிர்ப்பு என்கிறாய்
நீ இல்லா வாழ்வு
இருள் சூழ் உலகு
நான் தாங்கா என்னுயிர்
துணையாய் இருந்திடு என்னோடு
உயிரின் உயிராய் என்
உவகையின் பெருமகிழ்வாய்
உன்னைத் தொடர்கின்றேன் என்றும்
உவமையில் உறுதிப் பேறோடு…
- முனைவர் பி. வித்யா, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.