பொம்மை... பொம்மை...
தஞ்சாவூர் பொம்மை
தலையாட்டிப் பொம்மை
சிங்காரப் பொம்மை
சின்னச் சின்னப் பொம்மை
மழலை முதல் பெரியவரும்
விரும்பும் பொம்மை
விதவிதமான பொம்மை
விழிகளைக் கவரும் பொம்மை
தலையாட்டும் போது நம்மைத்
தாலாட்டும் உணர்வு தரும் பொம்மை
உறவுகளுடன் வாழும் பொம்மை
தேசதலைவர்களை நேசத்துடன்
தோழர்களாக்கி வாழும் பொம்மை
ஊஞ்சல் பொம்மை,
மரப்பாச்சி பொம்மை
காதல் பொம்மையென்று...
கொலுவில் எத்தனையோ பொம்மை...
அத்தனையும்...
சமத்துவப் பொம்மை
சாதிகள் இல்லாப் பொம்மை
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.