நினைவுகள்...!
வீட்டின் சுவற்றில்
வரிசையாய்ப் படங்கள்
ஒவ்வொரு படமும்
ஒவ்வொருவரின் நினைவுகளை
நிறைவாய் சுமந்தபடி...
தனியறையில் தாத்தா பாட்டி
கூட்டுக் குடும்பமாய் படத்தில்
அந்நாளைய அழகிய நினைவுகளை
அனுதினமும் சொல்லியபடி...
மடியில் மகனும் மகளும்
அருகில் அருமைக் கணவர்
படத்தைப் பார்க்கும் போதெல்லாம்
பிள்ளைகளின் நினைவு அம்மாவுக்கு...
ஏரிக்கரை ஆலமரத்தில்
தொங்கி விளையாடும் படம்
உடன்பிறப்புக்களுக்கு நினைவூட்டியது
வெட்டப்பட்ட ஆலமரத்தை...
இன்று மகிழ்வூட்டும் சில
எச்சங்களையாவது விட்டு வைப்போம்
நாளைய தலைமுறை அனுபவிக்க
இயற்கையையும் உறவையும் பாதுகாப்போம்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.