வாராங்க... வாராங்க...
காணாமல் போனவங்க
வாராங்க... வாராங்க...
கையெடுத்துக் கும்பிட்டு
வாராங்க... வாராங்க...
கவனமோடு வாக்குக்கேட்டு
வாராங்க... வாராங்க...
கொடுத்த பழைய வாக்குறுதியத்
தூசிதட்டி எடுத்துக்கிட்டு
திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டே
வாராங்க... வாராங்க...
வேட்பாளர் பார்வையிலே
வெட்கம்கெட்டு வாராங்க...
மாத்திமாத்திக் கூட்டணியா
மறக்காம வாராங்க...
தேர்தலுக்கு மட்டுமே
தொகுதிபக்கம் வாராங்க...
விரலுக்கு மைபூச
விழுந்தடிச்சி வாராங்க...
முகத்துக்குக் கரிபூச
முண்டியடிச்சி வாராங்க...
இவங்க ஊழல அவங்க சொல்ல
அவங்க ஊழல இவங்க சொல்ல
ஊழலோட உருவமா
ஊருக்குள்ளே வாராங்க...
ஜாக்கிரதை... ஜாக்கிரதை...
வாக்காளரே ஜாக்கிரதை....
பார்த்துப் பார்த்து வாக்களிங்க...
பக்குவமாத் தேர்ந்தெடுங்க...
துட்டு கிப்டு வாங்காம
மறக்காம வாக்களிங்க...
- டி. எச். லோகவதி, மதுரை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.