நம்பி விடாதே...!
வேட்பாளர் எல்லோரையும் நம்பிவிடாதே
நல்லவர் போல் வேடம் போடுவார் மயங்கிவிடாதே
சொன்னதெல்லாம் செய்துவிட்டோம் என்றிடுவாரே
அவர் சொல்வதெல்லாம் பொய்யென்று புரிந்திடு நீயும்
யோசித்து ஓட்டுப் போட்டா நீ நாலும் தெரிந்தவன்
ஓட்டுப் போட்டுவிட்டு யோசிச்சா நீ ஒன்றும் தெரியாதவன்
(வேட்பாளர்...)
வாயுள்ள பிள்ளை பிழைக்குமுன்னு எழுதிவச்சாங்க
அது வேட்பாளர் வெற்றுப் பேச்சை கேட்டதனாலா
தேனாறும் பாலாறும் ஓடும் என்பார்கள்
புரிந்து கொள்ளா மக்கள் இங்கு இருப்பதனாலா
நல்லவர்க்குப் போடும் ஓட்டு நன்மை பயக்கும்டா
அது காலமெல்லாம் நிம்மதியா வாழ வைக்கும்டா
(வேட்பாளர்...)
நேர்மையா நடந்தவங்க ஜெயித்திட வேண்டும்
பொய் சொல்லும் யாரையும் ஜெயிக்க விடாதே
ஜாதி மதம் பார்ப்பதில்லை என்று சொல்லுவோம்
நல்லவர்க்காய் உழைத்து நாமும் வென்று காட்டுவோம்
அதனால நம்நாடு சிறந்து நிற்கும்டா
மறந்து போகாதே... ஓட்டுப்போட மறந்து விடாதே.
(வேட்பாளர்...)
(பொம்பளைங்க காதலத்தான்... மெட்டுல... பாடிப் பாருங்க...)
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.