சிலம்பொலிக்க மறந்தனையோ இன்று...
காலத்தை வென்று நிற்கும் காப்பியமாம்
சிலம்பினையே ஞாலமெலாம் ஒலித்த நம்பி
சீலம்மிகு சிலம்பொலியே எங்கள் செல்லப்பா
சிலம்பொலிக்க மறந்தனையோ இன்று...
காலம் தந்த காப்பியத்தை முத்தமிழின்
மூலத்தை சீர்மிகுந்த சிலம்பினையே சீருறவே
காலந்தோறும் ஒலிக்கச் செய்த காவலரே!
சிலம்பொலிக்க மறந்தனையோ இன்று...
சங்க இலக்கியத்தைத் தேனாகத் தந்திட்ட
தங்கத் தமிழின் தவப்புதல்வா! ஏருறவே
ஞாலத்தில் சீரான சிலம்பினை சிலம்பியநீ
சிலம்பொலிக்க மறந்தனையோ இன்று...
- முனைவர் சி. சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.