ஆராய்ச்சி
தெரிந்தெடுத்த சிலவற்றுள் சந்தேகம் பிறக்கிறது
அவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறத்தின் மீதா...?
அவைகள் தேர்ந்தெடுத்த ரகத்தின் மீதா...?
அவைகள் தேர்ந்தெடுத்த விலையின் மீதா...?
அவைகளைத் தேர்ந்தெடுத்த நபரின் மீதா...?
அவைகளைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய நபரின் மீதா...?
தெரிந்தெடுக்கப்பட்டவற்றுள் சில புறக்கணிப்புகள் தேவையா...?
பரிசீலனை. மறுபரிசீலனை
எல்லாமும் ஒன்று போலவும் தோன்றலாம்
எல்லாமும் தேவையற்றதாகவும் தோன்றலாம்.
சந்தேகப் பிசாசின் ஆராய்ச்சியில்...
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.