காமராசர்
விருதில் எழுந்த
விழுதிலா ஆலமரம்,
விசித்திரப் பார்வையில்
விசாலங் கண்ட சுரபி,
மேக நிறத்தில்
தமிழ் தந்த காந்தி,
மந்திரக் குரலில்
எந்திரத்தை இயக்கி,
தந்திர வழியில்
நீரை நிறுத்தி அணைத்து,
புவியைச் சிரித்த வைத்த
புரிந்த புதிர்;
வணிகனாய் வளர்ந்து,
தலைவனாய் உயர்ந்து,
கல்வியைத் தூவி
அறிவினை வளர்த்து
சத்தாய் மதிய உரமிட்டு,
சிறார் பொதியல்ல
போதி தராப் புத்தர்களென்று,
போதியாய் உருமாறிக் கூறியவர்,
போர்க் குணமிலா
ஏழைப் போராளன்,
தொழிலும் வளமும் தந்த
தமிழ் முதல்வன்,
சிவகாமியின் செல்வம்
தமிழன்னையின் வரம்,
உயர் வெனும் சிந்தனையால்
சிந்தித்த உயரம்,
உயரம் நமக்கென நினைந்து,
சிந்தித்து நாமும் உயர்வோம்,
காலா காந்தியை மனதில் நிறுத்தி...
- முகில் வீர உமேஷ். திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.