சாதியும் மதமும்
ஓடும் நீருக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
வீசும் காற்றுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
தகிக்கும் நெருப்புக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
விரிந்த ஆகாசத்துக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
குளிரும் நிலவுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
சுடும் பகலவனுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
தாங்கும் பூமிக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
ஐந்தறிவு ஜீவன்களுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!
சாதியும் மதமும்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்...
பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?
- 'பரிவை' சே. குமார், தேவகோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.