குடிக்காதே!
குடிக்காதே! மதுகுடிக்காதே! - குடிப்பதனால்
குடும்பம் கெடும் குடலும் கெடும் - குடிக்காதே!
உன் குழந்தைகளின் படிப்பும் கெடும் - குடிக்காதே!
மதி மயக்கி மாண்பைக் கெடுக்கும் - குடிக்காதே!
பஞ்சமா பாதகமும் வரும் - குடிக்காதே!
நல்லவர்கள் உனைவெறுப்பா் - குடிக்காதே!
உன் நரம்புகள் வலுவிழக்கும் - குடிக்காதே!
நாயினும் இழிவாய்ப் போவாய் - குடிக்காதே!
திருடனாய் மாறிடுவாய் - குடிக்காதே!
திருமகளும் விலகிடுவாள் - குடிக்காதே!
போதையொரு சொர்க்கமல்ல - குடிக்காதே!
போய்விழுவாய் நரகத்திலே குடிக்காதே!
கவலைகள் மறக்கவும் - குடிக்காதே!
உடல் துன்பங்கள் மறந்திடவும் - குடிக்காதே!
மெல்லகொள்ளும் விஷம் அதுவாம் - குடிக்காதே!
பாவங்களின் வித்ததுவாம் - குடிக்காதே!
பகைவனுக்கும் இந்நிலை வேண்டாம் - குடிக்காதே!
குடும்பத்தைக் காக்கவேண்டும் - குடிக்காதே!
உன் குழந்தைகளை வளா்க்கவேண்டும் - குடிக்காதே!
சாதிக்கப் பிறந்தவன் நீ - குடிக்காதே!
சரித்திரமாய் வாழவேண்டும் - குடிக்காதே!
உலகத்தை உயர்த்த வேண்டும் - குடிக்காதே!
மண்ணாளப் பிறந்தவனே - குடிக்காதே!
மன்றாடி வேண்டுகிறேன் - குடிக்காதே!
- முனைவா் அரங்க. மணிமாறன், பரமனந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.