ஹைக்கூ கவிதைகள்
வெடிச் சத்தம்
பலமாகக் கேட்கிறது
காது கேட்கும் கருவியில்
*****
உயர் அழுத்த மின்கம்பி
உரச வெட்டப்படும்
உயர வளர்த்த மரம்
*****
எழுதும் எழுத்துகளில்
எப்போதும் வெளிப்படுவதில்ல
எழுதுபவர் மனம்
*****
எவரேனும் எங்கும்
எப்போதாவது கண்துண்டோ
இளைப்பாறும் எறும்பு
*****
கருவறைக் கடவுள்
சுதந்திரமாக உலவும்
கரப்பான் பூச்சி
*****
கோவில் கருவறைக்குள்
பதுக்கிவைத்துக் கொள்கிறது
பெருச்சாளி தன் இரையை
*****
தமிழர் பண்பாடு
முன்னோடியாக்கி வைக்கிறது
கீழடி மண்.!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.