தேடல்
பேருந்தில்,
முதல் இருக்கையில் அமர விரும்புவர்,
கடைசி இருக்கையில் அமர விரும்புவர்,
ஜன்னல் அருகில் அமர விரும்புவர்,
இருக்கை இல்லாமல் கடைசி
இருக்கையில் அமருவர்,
இன்ஜின் மேலே அமருவர்,
முன் வரிசையில் இடம் இருந்தும்
கடைசி இருக்கையில் அமர விரும்புவர்,
இடம் இல்லாமல் அடுத்த நிறுத்தத்தில்
இருக்கை காலியாகும் என்று
நின்று கொண்டே பயணிப்பர்,
இப்படிப் பயணத்தில் இத்தனை
விருப்பங்களுடம் பயணம் செய்தாலும்
இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிடுவர்.
ஆனாலும்,
அந்தச் சிறு பயணத்திலும்
இருப்பிடத்தைத்
தேடியே அலைகிறோம்!
வாழ்க்கை என்ற பயணத்தில்
நமக்கான இருப்பிடம் எங்கே என்று
நாம் பயணிக்கும் போதே புலப்படும்...
தேடல் என்ற பயணத்தில்
பயணிப்போம்
கிடைக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டே...
- கவிஞர் சாக்லா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.