களேபரம்
அங்கே
ஓர் களேபரம்!
காலில்
மிதிபட்டுக் கொண்டிருந்த
சேர முடியா
செருப்பு ஜோடிகள்
கைலியை ஒரு
கையில் பிடித்தபடி
ஓடி வந்த
வீட்டு எசமானர்கள்
தலை முடியை
கொண்டை
போட்டபடியே
வீட்டை விட்டு
வெளியேறிய
குடிசை கோட்டை
ராணிகள்
தூரத்தில் ஓடி நின்று
கை கட்டி
கண் இமைக்காத
அரைக்கால்
ஆணழகன்
பூமியில் நின்று
வேறு உலகிற்கு
சென்று கொண்டிருந்த
போதை இசையின்
ஞானிகள்
முட்டு சந்திடுக்கில்
காதல் முனுமுனுப்புகளை
மென்று கொண்டிருந்த
சைவ காதலர்கள்
அவர்கள் மேல்
கற்களை பொறுக்கி எறிந்த
கரட்டு மேட்டு வீராங்கனைகள்
எல்லாம் நடக்க
அந்த களேபரமும்
ஊரடங்கு உத்தரவு போட்டது
"நாடகத்தின் உச்சக்கட்டம் வந்ததால்"
- கவிஞர் சாக்லா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.