ஆடை
மொட்டாக
மலர்ந்து
பூவாக விரிந்து
இதழகாப்
பிறந்தாயே
தறியில்
தாளமிட்டு
திரியாகத்
திரிந்தாயே
வாலியில்
குளித்து
பல வண்ணங்களாக
தோன்றினாயே
ஆதவன்
சுட்டெரிந்திடக்
காய்ந்தாயே
பலவடிவில்
கோலங்களாகத்
திரிந்தாயே
உயிர் இனங்கள்
அணிய
ஆடையானாயே
புதுப்புதுப்
பெயர்
சூட்டப்பட்டு
புத்துயிர்
பெற்றாயே
பாய் விரித்து
பாடம் படிக்க
பஞ்சு
மெத்தையானாயே
தலைசாய்ந்து
உறங்கிட
பஞ்சுத்
தலையணையாக
உருவெடுத்தாயே
பெண்ணுடுத்தும்
ஆடையில் வகை
ஆயிரம் ஆயிரம்
சேலை உடுத்தும்
பெண்ணுக்கு
பண்பாடு
காட்டினாயே
அவள் உடுததும்
ஆடையில்
அரை குறையான
இடம் ஒன்றினைக்
கண்டானே
கண்டவனோ!
முழு ஆடையே
அரையும் குறையுமாக
ஆடை அணிந்தவளை
கண்டு சற்று
மயங்கி வீழ்ந்தவனே
ஆடையோ!
குறை இல்லை
அணிந்தவளோ!
குறை இடம்
விட்டு
இருந்தாள் என்று
சுட்டிக் காட்டினாயோ!
- கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.