வாய்ப்பு
இளைஞனே! இளைஞனே!
உன் கண் முன்னே
எப்பொழுதாவது தான்
தோன்றுவேன்…
ஒருமுறை மட்டுமே
தோன்றுவேன்…
என்தோற்றமோ
உனக்கு வியப்பாகலாம்…
ஏனெனில்…
என் உடல் முழுவதும்
வழுக்கி விடுமளவிற்கு
எண்ணெய்யால்
தடவியிருக்கின்றேன்…
என்னை எங்குபிடித்தாலும்
வழுக்கி வழுக்கி விழுவீா்
ஆனால்…
தலையில் காணும்
குடுமியை
இறுக்கப் பிடித்திருந்தால்
மட்டுமே - உன்னுடன்
நிலையாய்
நிலைத்திருப்பேன்…
அக்குடுமியே
உனக்கான வாய்ப்பு
பிடித்த மறுகணமே
நீ விட்டுவிட்டால்
மீண்டும் மீண்டும்
உன் கண்முன்னே
தோன்றுவது கடினம்…
என்னைப் பிடித்து
உன்னுடனே
நிலையாய்
நிலைநிறுத்தினால்
ஆயுள் முழுவதும்
அலங்கரிப்பேன்…
என் பெயரோ வாய்ப்பெனும்
பூதமாவேன்…
என்னை எங்கு பிடித்தாலும்
நான் வழுக்கிவிட்டு
நழுவி விடுவேன்…
ஏன் என்றால் என் உடல் முழுவதும்
எண்ணெய் தடவியிருப்பதால்…
என் குடுமியைப் பிடித்தால் மட்டுமே
உன்னிடம் நிலையாக நிற்பேன்…
என் குடுமியை விட்டுவிட்டால்
நீ என்னை மறுபடியும் பிடிப்பது
கடினம்…
- முனைவா் சி. இரகு, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.