பெருவெளி
தமக்கான வெளியைக் கண்டறிந்து
வெளிவரும் போதெல்லாம்
தடைகளை ஏற்படுத்தி
முடக்கிப்போடுகிறது
சமூகம்
எல்லைக் கோட்டுக்குள்
கொண்டு செல்லத்
துடிக்கிறது!
வரையறுக்கப்பட்ட மரபு
மீறுவதைக் கண்டு
தாளமுடியாத வேட்கையோடு
புனைவுகளை கற்பித்து
மகிழ்கின்றது!
பல விசாரனைகளுக்கு
உட்படுத்தி சுயத்தை
உடைத்து நொறுக்கி
வெளியேற்றுகிறது.
முதுகெலும்பில்லாத
கோழைகள் வாழ்வதற்கு
இடமாகிப்போன உலகத்திலே
தன்மானம்
அகலபாதளத்தில்
புதையுண்டு கிடக்கிறது
தட்டி எழுப்ப வரும் குரலை
அதிகாரம் என்னும் போர்வாள்
அடக்கி ஒடுக்குகிறது
சுயத்தின் வெளி
வெளிவரும் போதெல்லாம்
இலக்கில்லாத மனிதசமூகம்
குறைகளைக் கூறியே
தன்னைக் காப்பாற்றிக் கொண்டு
தன் ஆளுகைக்குள்
கொண்டுவரத் துடிக்கின்றதை
போலியாக வாழ்ந்து
பொய்யான முகத்தைக் காட்டி
தன்னையே ஏமாற்றிக் கொண்டு
சமூகத்தை ஏமாற்றி மடிகின்றது
போலி அபிமானமே வாழ்வு
அடிமையாக இருத்தலே
பாதுகாப்பு என்றெண்ணி
தன்னைத் தொலைத்து
அடையாளமற்று
உயிர்ப்பில்லாமல்
வாழ்கிறோம்
சுயத்தை தொலைத்து…
- முனைவர் இரா. பேபி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.