இருள்
இனிமையான
இருளே
கண்ணிமை
மூடினாயோ!!
அகிலமே
உறங்கிட
பரந்தமனம்
கொண்டுஒளி
நிறைந்தாயோ!!
விண்ணுலகிற்கு
விண்மீனாய்
விழித்திருக்க
யாம்காத்து
இரசிக்கச்
செய்தாயோ!!
கை கோர்த்து
மடியில் சாய்ந்து
மண்ணுலகில்
மண்டியிட்டு
கை ஏந்த
பார்க் கவைத்தாயோ!!
உன்னைநினைத்து
எமக்குச் சோறூட்டிட
பல பாடல்
பாட வைத்தாயோ!!
மண்ணுலகில்
பாய் விரித்து
மானுடத்தை
மயங்கிடச்
செய்தாயோ!!
பார் முழுக்க
விழித்திருக்க
முழுப்பிறை
ஆனாயோ!!
இரு மனம்
இணைந்து
வளர்பிறை
ஆனாயோ!!
காலம்கடக்கத்
தேய்ந்தாயோ!!
தேய்பிறையாக
கண்விழித்து
இமைத்தாயோ!!
வைகறை
பிறந்திட
- கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.