காதல்... காதல்... காதல்...
காதலை உணர்ந்து விட்டால் -
கொஞ்ச நேரம் அழ வைக்கும்
கொஞ்ச நேரம் தொழ வைக்கும்
சஞ்சல மில்லா இரு நெஞ்சிலும்
சதா சபலத்தை வர வழைக்கும்
காதலில் விழுந்து விட்டால் -
கொஞ்ச நேரம் கவிதை வரும்
கொஞ்ச நேரம் கனவு வரும்
அஞ்சியே நித்தம் சந்திக்க நேர்ந்திடும்
கெஞ்சியும் மிஞ்சியும் காலம் கழிந்திடும்
காதல் வந்து விட்டால் -
கொஞ்ச நேரம் உடல் வியர்க்கும்
கொஞ்சும் நேரம் உயிர் பறக்கும்
விஷத்தை உண்டாலும் உடன் செரிக்கும்
விண்மீன்களை கையெட்டிப் பறிக்கும்
காதல் வசப்பட்டு விட்டால் -
கொஞ்ச நேரம் தூக்கம் கெடும்
கொஞ்ச நேரம் துக்கம் வரும்
அகில உலகமும் காலின் கீழேயெனும்
அதிசய உணர்வு அடிக்கடி வரும்
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.