வாழ்வில் நன்மை
நிரந்தரம் என்பவையெல்லாம்
நிரந்தரமானதல்ல வாழ்வில்
முடிவானது என்பதெல்லாம்
முடிவானதல்ல கருத்தில்
தெளிவானது என்பதெல்லாம்
தெளிவானதல்ல அறிவில்
அறிவானது என்பதெல்லாம்
அறிவானதல்ல நடத்தையில்
முட்டாள்தனமானது என்பதெல்லாம்
முட்டாள்தனமானதல்ல நினைப்பில்
குழப்பமானது என்பதெல்லாம்
குழப்பமானதல்ல சிந்தையில்
உயர்வானது என்பதெல்லாம்
உயர்வானதல்ல எதுவும்
புரியாதது என்பதெல்லாம்
புரியாததல்ல காலம்
குறைவானதும் விரைவானதும்
நிறைவானதும் மறைவானதும்
யார்க்கும் பணியாததும்
பகையானதும் நட்பானதும்
என்பதே முக்காலும் உண்மை இதை
இக்கணம் உணர்வதே வாழ்வில் நன்மை
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.