பூவே...பூவே...!
மொட்டாக மலர்ந்து
இதழ்களை விரித்துப்
புன்னகைக்கும்
பூக்களே !
மென்மையான
மேனியில்
அமர
பனித்துளிகளைக்
காக்க வைத்தாயே !
மொட்டுக்கள்
மலர்ந்து
உன்
அழகைக் காண
தவமாய்
இருக்கிறதே !
விரிந்து படர்ந்து
இருந்தாயோ !
மகரந்தச் சூலினை
விழிக்க வைத்தாயே !
வண்டுகள்
ரீங்காரமிட
மது இரசத்தை
அள்ளித்தந்தாயோ !
அவன் பருகி
மயங்கிடச்
செய்தாயே !
மல்லிகைப் பூவோடு
பஞ்சு மெத்தையில்
மல்லுக்கட்டச்
செய்தாயே!
அடுக்குமல்லியோடு
இணக்கத்தில்
இணைக்கச்
செய்தாயே !
குண்டு மல்லியோடு
கூடிப் புணரச்
செய்தாயோ !
ஒவ்வொன்றும்
ஒரு விதம்,
மணமணக்க
மணந்தாயோ !
கூட்டம் கூட்டமாகப்
பூத்து
பூக்காரிக்
கூடையில்
சரம்சரமாக
வெடித்துப்
பூக்கடையில்
பூ மாலையாக...
பூந்தோட்டத்திற்கு
காவலனானாயோ...!
பறித்துச் சொருகிடச்
செய்தாயே... !
- கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.