முத்தத்தின் சாட்சியங்கள்…!
முத்தமெல்லாம் எச்சில் என்ற
பொய்யான வீண் வாதங்களெல்லாம்
நீ உமிழ்ந்த அமுதநீரில்
கரைந்துதான் போனதடி !!
சத்தமாக வெட்கம் விட்டுக்கூடக் கூறுவேன்
இதயம் இமைக்காமல்
உன்னைத்தான் தேடுதென்று!!
இம்சைபடுத்தும் இரவல் இரவெல்லாம்
தொல்லைதான் நீயில்லாத
இருட்டு நரகத்தில் ...
வீசும் காற்றில் விஷமாய் போதையேற்றும்
உன் மல்லிகைப்பூ வாசனையை
தொலைத்த பின்
என் அறைகளில் எங்கே போய்த் தேடுவேன்?
நல்லபிள்ளை பேரெல்லாம் எனக்கு வேண்டாம்
முற்றும் துறக்கிறேன்
புத்தனாக அல்ல...
புனிதனாக அல்ல...
மனிதனாக !!
பிறந்த குழந்தையாய் உன்னைத் தழுவி
வாழும் நரகத்தை
சொர்க்கமாக்க உன்னைத் தேடுகிறேன்
எப்போதுதான் வருவாய்?
உறங்காமல்
கனவில்கூட உனக்காகக் காத்திருக்கிறேன்
அதீத ஆத்ம காதலோடு !!
காமத்துக்குப் பின்னும்
செத்துப் போகாத
கோடியில் ஒருத்தருக்கு
விதிவிலக்காய் வரும்
காதலைப் போல
என் காதலும் பரிசுத்தமானது.
தேவன் தேடும்
என் காதலை தேவி நீ உணர்வாயோ?
- நௌஷாத் கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.