உன்னையும் என்னையும் போல!
அப்படியெல்லாம் ஒரேயடியாய்
இரக்கமில்லாமல் கிறக்கமாய் பார்க்காதே - உன்
வயகரா கண்களின் வீரியத்தில்
செத்துவிடப் போகிறேன் !
என்ன உளறி உதிர்த்துவிட்டாய்?
உன் பேச்சு வேதங்களின்
கிதாப்பை கொண்டு நூலகம் அமைக்கப் போகிறேன் !!
இரவில் உறங்கவிடாமல்
இமைக்காமல் வரும்
கனவின் கனவுநாயகி நீ !
படித்தப் புத்தகங்களின்
மடித்தப் பக்கங்களின்
விருப்பக்குறி நீ !!
நீயில்லாத இரவு
நிலவில்லாத வானம்
விட்டுப்போன பூர்வபந்தம் நிலைக்க
நீ ஒருமுறை தொட்டுச்செல்
செத்துப்போன உயிர்நாடி கூட
ஆச்சரியக்குறிகளாகும்
ஒன்றே ஒன்றை இறுதியாய்
மூச்சின் உயிர்ப்போடும் - அவதானிப்போடும்
சொல்லிவிட்டுச் செல்கிறேன்
என் தடம் நீ
என் வழி நீ
என் அடையாளம் நீ
நானே நீ!!
நீரில்லாத உலகம் மட்டுமின்றி
நீயில்லாத உலகமும் வாழ்தல் கொடிது !!
காமம் - காதல்
இக்கொடிய பிரபஞ்சத்தில் பிரிக்க இயலாதது
உன்னையும் என்னையும் போல!!
- நௌஷாத் கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.