தொலைந்து போக ஆசை...!
மழலையாக மண்ணில்
விளையாட ஆசை...
மழையில் நனைய
ஆசை...
மாந்தோப்பில் பால்ய தோழிகளோடு
மணல் வீடு கட்டி
விளையாட ஆசை...
கண்ணாம்பூச்சி
விளையாட ஆசை...
காகித கப்பலில்
கடலை கடக்க ஆசை...
சக மாணவனோடு கோலி
விளையாட ஆசை...
சங்கீதம் கற்க வாய்க்காலில்
கால் நினைத்துப் பாட ஆசை...
வயப்போரமாக நின்று
மீனின் துள்ளலை ரசிக்க ஆசை...
வைக்கோல் போரில் ஏறிக்
கோழி கூவுவதைப் பார்க்க ஆசை...
ஊர்த் திருவிழாவில்
புணல் ரேடியோவில்
பழையப் பாடலைக் கேட்க ஆசை...
பக்கத்தூர் பிள்ளைகளோடு
பரமபதம் பந்தயம் வைத்து ஆட ஆசை...
இன்னுமின்னும் எத்தனையோ
ஆசைகளோடு
கனவில் இல்லாமல்...
நிஜத்திலே
மழலையாக மாறித்
தொலைந்து போக ஆசை.
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.