பேரன்பு கொண்ட கொரோனாவே…
அன்பே கொரோனா
ஈவு இரக்கமில்லாமல்
எத்தனை உயிர்களை
நீ பலியாக்கிக் கொண்டிருக்கிறாய்?
பணபலம் கொண்ட எத்தனை நாடுகள்
உன்னைக் கண்டு அஞ்சுகின்றன??
காற்றின் வேகத்தை மிஞ்சுகின்றன
உன் தாக்கத்தின் விஷம்
சாதிப் பெருமை பேசியவனை எல்லாம்
முடங்க வைத்துவிட்டாய்!
மதம் பிடித்தவனையெல்லாம்
மனிதம் நினைக்க வைத்துவிட்டாய்
வேலையின் பின் ஓடியவனை எல்லாம்
சுயம் நினைக்க வைத்துவிட்டாய்
பணத்தின் பின் சென்றவனையெல்லாம்
குடும்பம் நினைக்க வைத்துவிட்டாய்
ஆன்மீகம், அரசியல் கூச்சலில்லை
சிவன் , அல்லாஹ் , ஜீசஸ் எல்லாம்
ஓய்வெடுக்கிறார்கள்
ஏக மருத்துவன், செவிலித்தாய்களெல்லாம்
எங்களுக்காக ஓய்வில்லாமல்
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மனிதன் மனிதத்தின் மகிமையை
இப்போதுதான்...
உன்னால் உணர்ந்து கொண்டிருக்கிறான்
நீ செய்த நன்மை சிறிதெனினும்
நீ செய்த கொடூரங்கள் சொல்லி மாளாது
எத்தனை உயிர்ப்பலி
எத்தனை கோடி பொருளாதார இழப்புகள்
எத்தனையோ ஏழை குடும்பங்களின்
வாழ்வாதாரங்கள்
பறிபோன கதைகளெல்லாம்
நீ கேட்க நேரிட்டால்
நீயே எங்களுக்காகக் கண்ணீர் சிந்துவாய்...
தயவு செய்து
வந்த சுவடேத் தெரியாமல் போய்விடு
பேரன்பு கொண்ட கொரோனாவே...
- ஹனிக்காஷெரின் . என்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.