வித்தியாசக் கனவு

யாருக்கும் தெரியாமல்
நாலுபோத்தல் எடுத்து
சேட்டுக்குள் வைத்து - போத்தலை
பொத்திக் கொண்டோடி
ஆளில்லா இடம் தேடி
வரம்பெல்லாம் அலைந்து
வந்தடைந்தோம்
வாய்க்கால் கட்டோரம்.
லவெக்கென்றுஉடைத்து
மடக்கென்றுகுடித்து
மட்டையானபிறகு
நண்பனிடம் கேட்டேன்,
கடைசிமட்டும் கோவிக்கமாட்டேன்
கட்டாயம் உண்மையைசொல்
புட்டுப் புட்டுப் வைப்பேன் மச்சான் - என்னய
புடிச்சுக் கொண்டுவீட்டவிட்டாபோதுமென்றான்.
அன்றுஅடிச்சஅம்பாறைக்கு
அழைக்கவில்லைஏன் என்றேன்
அரைஅடிச்சும்
அடங்காத வயிற்றுக்கு
மூனு பேர் சேர்ந்து
முக்காலஅடிச்சாகாணுமா?
பங்குபெரிசாகும் என்டுதான்
பாதிலபோய்த்தன்டா
ஐ லவ் யூ மச்சான் என்டான்
ஆள் அப்படியேசாஞ்சுதான்.
போதை ஏறினால் - புடிச்ச
பொண்ணுமேல ஆசை ஏறுமாமே!
லொக்கைகீறி - ஒரு
நம்பர் எடுத்தது ஞாபகம்.
புதுசா இருக்கட்டுமே என்று
பொண்டாட்டி என்றேன்
போதையில இருக்கையா என்றாள்.
உருட்டி உருட்டி ஒழுங்கைக்க
உங்க அண்ணன் அடிக்கக்க ஓடாம நின்டனே
நம்பிக்கை இல்லையாஎன்றேன்,
நம்பியதால்தானே இப்படி இருக்கனென்றாள்.
இப்படிப் பட்டவளுக்கு எப்படியாச்சும்
இன்பம் கொடுக்கனும் என்று,
உலகத்தைவென்று
உலங்கு வானூர்தியில்
உயரப் பறந்து
உல்லாசமாய் வாழ்ந்தாலும்
உயர்வாய் சொல்வேன்
உயர்வுக்குக் காரணம் நீ என்று - இது உன்
உள்ளங்கை மீது சத்தியம் என்றேன்.
உச்சம் தலையில் சத்தியம் செய்யாமல்
உள்ளங்கையில் சத்தியம் செய்தது ஏனோ?
திருவிளையாடல் படம் போல இருந்தது
தமிழ் உச்சரிப்பு.
மாட்டிக் கொள்வோம் என்று கதையை
மாத்திவிட்டேன்.
என்ன பன்னுறா என்றேன்,
அடுப்புக்குக்குமேல இருக்கன் என்றாள்.
கடுப்பாகித்தயா? எனக் கேட்டேன்,
கத்தியும் சுத்தியலும் வந்தது
கதையோடே வீட்ட வந்ததேன்.
சத்தமில்லாமல் வந்து
உத்தமன் போல் குளித்து
தத்துவம் ஒன்றைவிட்டேன்.
வெறிகாறன் நீ
வீரவசனம் பேசுறயா - என்று
படிக்கட்டுக்கு புடிக்கவில்லை போல
தடார் என்று இடறி
சடார் என்று விழுந்தேன்
அம்மாவின் காலடியில் ஆள்.
அம்மாவிற்கு ஒரு சந்தேகம்
அக்காவின் மகள் வந்து
மாமா என்றாள்
என்னம்மா என்று எழும்பிய நான்
மறுபடி மருமகள் காலடியில்
நல்லாயிரு மாமா என்பதற்குள்,
நல்லா இருந்த வயிற்றுக்கு
நரம்புத் தளர்ச்சி வந்தாற் போல
களகள என்று ஒரு சத்தம்
கடுமையாய் கேட்டது
உச்சிக்கேறிய பித்தம்
சத்தம் போடாமலே
வளவள என்றது வாயால்.
சுத்தி நின்று சொந்தங்கள்
கலகல என்ற இரைச்சலோடு
உச்சியிலே பச்சைதேசிக்காய்
உரைஞ்சினர்.
நானும் குடிகாரன் ஆகித்தனா?
கவலையோடு இருந்தேன்.
கிழட்டு மாமா எழும்பு அம்மா - வீட்ட
கூட்டப் போறாவாம்
குட்டிப் பொண்ணு எழுப்பக்கதான் தெரிந்தது
இதுவும் கனவு என்று.
- சதாசிவம் டினேஸ்காந், படையாண்ட வெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.