அன்புக்கு நான் அடிமை
தென்றலாய் நீயும்
சுவாசமாய் நானும்
தொடர்கிறோமே வாழ்க்கை
இது நம் வாழ்க்கை
உன் பெயரிலே பருவங்கள்
என் உயிரிலே உருவங்கள்
உறங்காமலே உன் நினைவுகள்
ஏக்கத்திலே என் கனவுகள்
சுமையாய் சோகமாய்
சொர்க்கத்திலே சுகமாய்
கல்வியெனும் கூடத்திலே
நான் இரசித்த காதலியாய்
வாழ்வென்னும் வசந்தத்தைத்
தந்தவளாய் நிற்கின்றாய்..!
நடக்கின்றாய்…!
சிரிக்கின்றாய்…!
என் சிந்தையைக் கொள்கின்றாய்
என் சிங்காரக் காதலியே!
உன்னை நானும் சரணடைந்தேன்
உயிர்த்திடுவாய் என் வாழ்க்கையையும்...
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.