நீ வருவாயா...?
சித்திரை திங்களில்
தித்திக்கும் நிலவொளியில்
நிழலாக நின்றாயே!
என் இதயத்தில்
அறிவிப்பின்றி புகுந்தாயே!
அன்றுமுதல் தேடுகிறேன்
அகப்படுவாயா…?
மஞ்சள் நிறத்தழகி
மயில் கொஞ்சும் நடையழகி
நான் கொஞ்ச வருவாயா...?
சித்திர உருவழகி
தேன் சிந்தும் பேச்சழகி
சிந்தையிலே நீயிருக்க
நான் சிரித்து பேச வருவாயா?
என் நெஞ்சினிலே
நம் காதல் ஒளிவீச
உன் நெஞ்சத்திலே இடம் தேட
மஞ்சத்திலே விளையாட வருவாயா?
நீயும் என்னை
தனியாகத் தவிக்க விடுவாயோ?
இல்லை
வாழ்க்கைத் துணையாக வருவாயோ…!
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.