எல்லாம் நன்மைக்கே…
என் வெளிநாட்டுச் சகோதரனே
உலகம் சுற்றும் வாலிபனே
உன்னைக் கண்டு உலகமே அஞ்சுகிறது
நான் மட்டும் பெருமிதம் கொள்கிறேன்!
உனக்கு சமூகம் இட்ட பெயரோ
‘கொரோனா வைரஸ்’
உலகை அழிக்க வந்த வைரஸா நீ
மனித வாழ்வை உணர்த்தும் வைரஸ் நீ
பண்டைய வசந்தத்தை மீட்டெடுத்து
அந்நியர்களின் கைகுலுக்கும் மரபை முறியடித்து
இந்தியர்களின் கைகூப்பும் மரபிற்கு உயிர் கொடுத்து
விந்தை காட்டி விட்டாய்
‘சுத்தம் சோறு போடும்’
எனும் மூத்தோர் வாக்கை
இளைஞர்களின் மனதில் விதைத்து விட்டாய்
அரசாங்கப் பொருளாதாரத்தை உயர்த்தும்
மதுப்பிரியர்களையும் திருத்தி
குடும்பப் பிரியர்களாக மாற்றிவிட்டாய்
சகோதரனே!
உன்னால் சமூகத்தில்
பல அழிவுகள் நிகழ்ந்தாலும்
என் பேனா ஏனோ
நல்ல சமூக மாற்றத்தையேத் தீட்டுகிறது
‘எல்லாம் நன்மைக்கே’
என்பதை உணர்த்தவோ...!
- செ. பிரியதர்ஷினி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.