தீயின் நாவாய்...
மேற்கத்திய நெடி
கலைவிழா கண்ட நவீன சந்தையில்
இல்லத்து அஞ்சறை பெட்டியை
மரணிக்க விடாது
கொஞ்சம் கதகதப்பை
தீயின் நாவாய்த் தீவிரப்படுத்துவோம்
கேடா சுவைகூட்டிகளை தூரமாக்கி
மண்ணுக்கேற்ற உணவுகளை
நோய்க்கு முன்பாக
உண்ண நாளும் பழகுவோம்
புழங்குவெளி அத்தனையும்
துப்புரவு வெளிச்சத்தில்
இருளகற்றிக் காத்திடுவோம்
தனிமனித அழகியலை
தூய்மையின் துணையோடு
கையகப்படுத்தி
கனத்த மனதை சற்றே இளைப்பாற்றி
சாயங்களற்ற
பழைய வாழ்வியல் தடங்களை
மீட்டெடுப்போம்
பிற்பாடு
மேகத் தூரிகை எடுத்து
தூயவெளியை
ஒரு மழை நாளாய் மணக்கச் செய்வோம்
- இந்திரா அரசு, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.